
ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வந்த ‘தர்பார்’ படத்தின் பட வேலைகள் அனைத்தும் முடிவடைந்ததால், ரஜினிகாந்த் தனது அடுத்த பட பணிகளை துவக்கி விட்டார்.
இப்படத்தினை சிறுத்தை சிவா இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் மிகவும் பிரம்மாண்டமாக தயாரிக்கவிருக்கிறது. டி இமான் இசையமைக்கவிருக்கிறார்.
‘தலைவர் 168’ என்ற தற்காலிக டைட்டில் வைத்துள்ள படக்குழு இன்று பூஜையோடு படப்பிடிப்பை ஆரம்பித்துள்ளது.
பூஜையில் சில நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் இடம்பெற பூஜை சிம்பிளாக நடந்துள்ளது.
அந்த புகைப்படத்தையும் தயாரிப்பு குழுவினர் சற்று நேரத்திற்கு முன்பு வெளியிட்டுள்ளனர்.
Facebook Comments





