
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் காதல் விவரம் நாம் அனைவரும் அறிந்த விஷயம்.
நயன்தாராவின் அன்பு கட்டளைக்கு இனங்க விக்னேஷ் சிவன் அடுத்த முயற்சியாக ஹீரோவாக களமிறங்கவிருக்கிறாராம். இயக்குனர் யார் என்பது தான் புரியாத ஒரு புதிராக உள்ளது.
ஹீரோயினாக நயன்தாராவே நடிக்கவிருக்கிறாராம். நயன்தாராவே தயாரிக்கும் இப்படத்தினை தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் எடுக்க திட்டமிட்டிருக்கிறார்களாம்.
இப்படத்தின் இயக்குனர் பொறுப்பை விக்னேஷ் சிவனிடமே அளிப்பதா அல்லது வேறு இயக்குனரிடம் ஒப்படைப்பதா என்று இருவரும் ஆலோசித்து வருகின்றனர். நிஜவாழ்வில் காதல் ஜோடியாக வலம் வரும் விக்னேஷ் சிவன், நயன்தாரா தற்போது திரையிலும் காதல் ஜோடியாக நடிக்கவிருப்பதாக வெளியாகியிருக்கும் தகவல் கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Facebook Comments