சென்னை: காவேரி மேலாண்மை அமைக்க வலியுறுத்தி ஐபிஎல் போட்டிகளை நடத்தக்கூடாது என பல அமைப்புகள் நேற்று சென்னை அண்ணாசாலையை முற்றுகையிட்டது.
இப்போராட்டத்தினை சிதைக்கும் வகையில் சிலர் போலீஸாரை தாக்கினர். சமூக வலைதளங்களில் அந்த வீடியோ மிக வேகமாக பரவி வருகிறது.
இதுகுறித்து ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘சீருடையில் இருக்கும் காவலர்கள் மீது கை வைப்பவர்களை தண்டிக்க கடுமையான சட்டம் தேவை
வன்முறையின் உச்சகட்டமே சீருடையில் பணிபுரியும் காவலர்கள் தாக்கப்படுவதுதான்
இத்தகைய வன்முறை கலாசாரத்தை உடனே கிள்ளி எறியவில்லை எனில் நாட்டிற்கே பேராபத்து.’ என்று கூறியுள்ளார்.
Facebook Comments