
காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி ஐபிஎல் போட்டிகள் சென்னையில் நடைபெறக்கூடாது என பல அரசியல் கட்சிகள் வலியுறுத்தின.
சென்னையில் தங்களால் போதிய பாதுகாப்பு வசதி செய்து தர முடியாது என சென்னை காவல்துறை கைவைரித்த நிலையில் சென்னையில் நடக்கவிருந்த அனைத்து போட்டிகளையும் வேறு மாநிலத்தில் நடத்தில் ஐபிஎல் நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.
இதுகுறித்து ட்விட்டரில் கருத்து கூறியுள்ள நடிகர் சித்தார்த், ‘ பிரபல அரசியல் வாதிகள் நடத்தும் டிவிகளையும் டாஸ்மாக் கடைகளை மூடவும் போராடுவீர்களா.? அதேபோல் போராட்டத்தில் கலந்து கொள்பவர்கள் தங்கள் கட்சிக் கொடியை தவிர்ப்பீர்களா? தமிழகத்தில் மக்களுக்கு சங்கடமான விஷயங்கள் பல நடக்கின்றன. ஒற்றுமையுடன் போராடுங்கள்’ என கூறியுள்ளார்.
Facebook Comments