Spotlightசினிமா

அர்ஜுன் தாஸ் – அதிதி ஷங்கர் இணையும் ‘ஒன்ஸ்மோர்’ ஆகஸ்ட் 28 வெளியீடு உறுதி… புதிய போஸ்டருடன் அறிவிப்பு!

மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில், அர்ஜுன் தாஸ் மற்றும் அதிதி ஷங்கர் இணைந்து நடித்துள்ள காதல் மற்றும் பொழுதுபோக்கு திரைப்படமான ‘ஒன்ஸ்மோர்’, வரும் ஆகஸ்ட் 28 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனை முன்னிட்டு புதிய ரிலீஸ் தேதி போஸ்டரும் வெளியிடப்பட்டுள்ளது.

காதல், உணர்வுகள் மற்றும் இளைய தலைமுறையை கவரும் பொழுதுபோக்கு அம்சங்களுடன் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில், அர்ஜுன் தாஸ் மற்றும் அதிதி ஷங்கருடன் பிரபல மாடல் சோனா ஒலிக்கல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்த திரைப்படத்தின் மூலம் ஹேஷாம் அப்துல் வஹாப் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். ஏற்கனவே ஹிருதயம், குஷி, ஹாய் நானா போன்ற வெற்றிப்படங்களுக்கு இசையமைத்து ரசிகர்களின் பாராட்டைப் பெற்றுள்ள அவர், ‘ஒன்ஸ்மோர்’ படத்திற்கும் இசையமைத்திருப்பதால் பாடல்கள் மற்றும் பின்னணி இசை மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த திரைப்படத்திற்கு ராஜ் கமல் கலை இயக்கத்தை கவனித்துள்ளார். நவா ராஜ்குமார் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றியுள்ள நிலையில், மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் சார்பில் யுவராஜ் கணேசன் தயாரித்துள்ளார்.

ஏற்கனவே வெளியான டைட்டில் டீசர், ‘இந்திரா’, ‘வா கண்ணம்மா’ ஆகிய பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தன. தற்போது வெளியாகியுள்ள அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு, படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

அர்ஜுன் தாஸ் – அதிதி ஷங்கர் கூட்டணி, ஹேஷாம் அப்துல் வஹாபின் இசை மற்றும் இளமையான காதல் கதையுடன் உருவாகியுள்ள ‘ஒன்ஸ்மோர்’, வரும் ஆகஸ்ட் 28 முதல் உலகம் முழுவதும் ரசிகர்களை திரையரங்குகளில் சந்திக்கவுள்ளது.

Facebook Comments

Related Articles

Back to top button