Spotlightசினிமா

படவேட்டு – விமர்சனம்

லீஜு கிருஷ்ணன் இயக்கத்தில் நிவின் பாலி, அதிதி பாலன், ஷம்மி திலகன் நடிப்பில், உருவாகி வெளியாகியிருக்கும் படம் தான் “படவேட்டு”.

இப்படத்தை யூடல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வெளியிட்டிருக்கிறது.

விவசாயிகளுக்கான வேளாண் திட்டம், வயலுக்கு வேலி போடும் திட்டம், மண் வளம் மேம்படுத்துதல் மற்றும் உரம் வழங்கும் திட்டம், விளைந்து வரும் பயிர்கள் மற்றும் காய்கறிகளுக்கான விலை நிர்ணயிக்கும் திட்டம் என்பது போன்ற பல திட்டங்களின் உண்மையையும் அதில் நடக்கும் அரசியல் பின்னணியையும் பேசியுள்ள படம் தான் இந்த “படவேட்டு”.

கேரள மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் ஓட்டப்பந்தய வீரனாக இருக்கிறார் நம்ம ஹீரோ நிவின் பாலி. ஒரு விபத்தின் காரணமாக எந்த வேலையும் செய்ய முடியாத சூழலுக்கு தள்ளப்படுகிறார் நிவின்.

அப்போது, திடீரென ஒரு நாள் ஷம்மி திலகனின் கட்சியினர் ஓட்டை உடைசலாக இருக்கும் நிவின் பாலியின் வீட்டை புதுப்பித்து தருகின்றனர். அந்த வீட்டின் முன் ஆதரவளிக்கப்பட்ட இல்லம் என்ற பலகையை வைக்கின்றனர் அக்கட்சியினர்.

கிராம மக்கள் அனைவரும் நிவின் பாலியை ஏளனம் செய்ய, பொறுக்க முடியாத நிவின் பாலி அந்தப் பலகையை உடைத்தெறிகிறார். அதன் பின் கட்சிக்காரர்களுடனும் மோதல் ஏற்படுகிறது.

அதன் பிறகு நடக்கும் சம்பவங்களே படத்தின் மீதிக் கதை.

வழக்கம் போல நிவின் பாலி கதைக்கான நாயகனாக யதார்தமாக நடித்துள்ளார். உடல்மொழியை வைத்து படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறார். அதிதி பாலனுடனான காதல் காட்சிகள் மிகவும் அழகாக காட்டியிருக்கிறார்கள்.

அதிதி பாலனுக்கு பெரிய அளவில் கதாபாத்திரம் வலுவில்லை என்றாலும், கொடுத்த காட்சியை சிறப்பாக செய்து முடித்திருக்கிறார்.

மத்திய அரசின் பல தோல்வியடைந்த திட்டங்களை தோலூரித்து காட்டியிருக்கிறார் இயக்குனர்.

குறிப்பாக படத்தின் இறுதி காட்சியில் வரும் “என் வீடு, என் உரிமை”, “என் நிலம், என் உரிமை”, “என் நாடு, என் உரிமை” என்ற வசனம் முதல் பல வசனங்கள் திரையரங்குகளில் கரவோசை எழுகிறது.

Facebook Comments

Related Articles

Back to top button