
ஹனி பிரேம் ஒர்க்ஸ் நிறுவனம் தயாரிப்பில் இந்த படத்தை இயக்கி நடித்திருக்கிறார் அறிமுக நடிகர் வி (விஜய் குப்புசாமி). அனிகா விக்ரமன் மற்றும் சைத்ரா ரெட்டி ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். கதையின் விமர்சனத்தை பார்த்து விடலாம்.
கதைப்படி,
வாழ்க்கையில் மன குழப்பத்தை போக்கவும், மனதை ஒருநிலைப்படுத்தவும் அதற்கான ஸ்பெஷலிஸ்டை நாடுவார்கள். அப்படியாக நம்ம நாயகன் வி, Manipulation என்ற கவுன்சிலிங்க் கொடுப்பவராக வருகிறார்.
அப்படி கவுன்சிலிங்கிற்கு வரும் நாயகி அனிகா மீது காதல் கொள்கிறார் வி. அனிகாவும் வி மீது காதல் கொள்கிறார். ஒருநாள் வி, தனது காதலியான அனிகாவிடம் , தான் சைத்ராவை பெண்ணை சில வருடத்திற்கு முன் காதலித்ததாகவும், இருவருக்கும் பிரேக் அப் ஆகிவிட்டதாகவும் தெரிவிக்கிறார். அந்த காதல் தன்னை பெரிதாக பாதித்ததாகவும் கூறுகிறார்.
அப்போது அதை பெரிதாக கண்டுகொள்ளாமல் விட்டுவிடுகிறார் அனிகா. இந்நிலையிலையில் அனிகாவிற்கும் வி’க்கும் திருமணம் ஆகிறது. சில நாட்கள் கழித்து பழைய காதலியான சைத்ராவை எதிர்பாராதவிதமாக சந்திக்கிறார் வி. இருவரும் மீண்டும் நட்புடன் பழகி வருகின்றனர்.
இந்த நட்பை சந்தேக கண்ணோடு பார்க்கிறார் அனிகா.. அதன் பிறகு என்ன நடந்தது என்பதே படத்தின் கதை…
படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை வி, அனிகா மற்றும் சைத்ரா மூவரும் பயணிக்கும் காட்சிகள் மட்டுமே இடம் பெறுகிறது. இவர்கள் மூவரும் மட்டுமே பேசி … பேசி… பேசி… பேசிக் கொண்டே நகர்ந்து செல்கின்றனர். ரசிகர்களை எந்த விதத்திலும் ரசிக்க வைக்க இவர்களால் முடியவில்லை. க்ளைமாக்ஸ் காட்சியில் கடைசி 15 நிமிடங்கள் மட்டுமே ரசிக்க வைத்திருக்கிறார் இயக்குனர் வி.
அந்த 15 நிமிடங்கள் ரசிக்க வேண்டும் என்றால் நாம் படம் முழுவதையும் கட்டாயம் பார்க்க வேண்டும் என்ற ”செக்” வைத்திருக்கிறார் இயக்குனர் வி.
நல்ல முயற்சி தான் என்றாலும், அதை இன்னும் சுவாரஸ்யத்தோடும், ரசனைக்கு ஏற்றவாறு கொடுத்திருந்தால் விஷமக்காரன் வித்தியாசமானவானாக தெரிந்திருப்பான்.
ஒளிப்பதிவு கலர்ஃபுல். பின்னனி இசை ஓகே ரகம் தான். நடிகராக வி அவர்களுக்கு இன்னும் சற்று பயிற்சி வேண்டும் என்று தான் சொல்ல வேண்டும்… நாயகிகளாக அனிகா மற்றும் சைத்ரா இருவரும் கதாபாத்திரத்திற்கு ஏற்றவர்கள்…
விஷமக்காரன் – வித்தியாசமானவன்..