Spotlightதமிழ்நாடு

வங்கக் கடலில் உருவானது ஃபானி புயல்.. தப்புமா தமிழகம்..??

ங்கக் கடலில் ஃபானி புயல் உருவானதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது, தென்கிழக்கு வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் தற்போது ஃபானி புயலாக மாறியது என்றும் சென்னைக்கு அருகே உள்ள ஃபானி புயலானது நாளை அதி தீவிர புயலாக மாறும் என்றும் கூறியுள்ளார்.

இந்தப் புயலால் தமிழகத்துக்கு எந்த பாதிப்பு இல்லை எனவும் அதேசமயம் மழை குறித்தும் நாளை தெரியவரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்கிழக்கு வங்கக் கடலில் உருவான இந்த புயலுக்கு ஃபானி என வங்கதேசம் பெயர் சூட்டியுள்ளது.

Facebook Comments

Related Articles

Back to top button