Spotlightவிமர்சனங்கள்

ஃபீனிக்ஸ் – விமர்சனம் 3.25/5

இயக்கம்: அனல் அரசு

நடிகர்கள்: சூர்யா சேதுபதி, வரலக்‌ஷ்மி சரத்குமார், சம்பத் ராஜ், தேவதர்ஷினி, முத்துக்குமார், திலீபன், அஜய் கோஷ், ஹரீஷ் உத்தமன், மூனார் ரமேஷ், காக்கா முட்டை விக்னேஷ்

இசை: சாம் சி எஸ்

ஒளிப்பதிவு: வேல்ராஜ்

கதைப்படி,

சென்னையில் எம் எல் ஏ-வாக இருக்கும் சம்பத்தை கொடூரமாக கொலை செய்த குற்றத்திற்காக கைது செய்யப்படுகிறார் சூர்யா சேதுபதி. கொலை செய்யப்பட்டவர் எல் எல் ஏ என்பதால் அந்த ஏரியே பரபரப்பாக இருக்கிறது.

நீதிமன்ற காவலில் அடைக்கப்படுகிறார் சூர்யா சேதுபதி. எம் எல் ஏ-வின் மனைவியான வரலக்‌ஷ்மி சரத்குமார், தனது ஆட்களை சிறைக்குள் அனுப்பி சூர்யாவை கொலை செய்ய திட்டமிடுகிறார்.

அனுப்பி வைக்கும் ஆட்கள் அனைவரையும் அடித்து துவைத்து அனுப்புகிறார் சூர்யா. மீண்டும் கொலை வெறி கொண்டு சூர்யாவை கொல்லை துடிக்கிறார்கள் எம் எல் ஏ-வின் வகையறாக்கள்.

யார் இந்த சூர்யா.? இவர் எதற்காக எம் எல் ஏ-வை கொன்றார்.? சூர்யாவிற்கு எம் எல் ஏ சம்பத்திற்கும் என்ன சம்மந்தம் .? உள்ளிட்ட பல கேள்விகளுக்கு விடை இரண்டாம் பாதியில் வைத்திருக்கிறார் இயக்குனர்.

தனது முதல் படத்திலேயே முத்திரை நடிப்பைக் கொடுத்து மிரட்டியிருக்கிறார் சூர்யா சேதுபதி. தனது முழு நடிப்பையும் ஆக்‌ஷன் ஒன்றிலேயே கவனம் செலுத்தி, அதனை மிரட்டலாக கொடுத்திருக்கிறார்.

நடிப்பில் சின்ன சின்ன குறைகள் இருந்தாலும், ஆக்‌ஷன் காட்சிகளில் வெறி கொண்டு எடுத்த முயற்சிக்காக சூர்யாவை வெகுவாகவே பாராட்டலாம்.

படத்தில் மற்ற கதாபாத்திரத்தில் நடித்த, வரலக்‌ஷ்மி சரத்குமார், முத்துக்குமார், ஹரீஷ் உத்தமன், சம்பத், நக்‌ஷத்ரா, தேவதர்ஷினி உள்ளிட்ட சீனியர் நடிகர்களும் தங்களது நடிப்பை அளவாக கொடுத்திருக்கின்றனர்.

காக்காமுட்டை படத்தின் மூலம் பிரபலமான விக்னேஷ், இப்படத்தில்மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருக்கிறார். உடல் உழைப்பை அதிகமாகவே கொடுத்து கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்.

சாம் சி எஸ் இசையில் பின்னணி இசை மற்றும் இரண்டாம் பாதியில் வந்த குத்து பாடல் என படத்திற்கு கூடுதல் பலமாக நிற்கிறது.

முதல் பாதியிலேயே படத்தின் கதை இதுதான் என்று தெரிந்தாலும் கூட, அதை எடுத்துச் சென்ற விதம் பரபரக்க வைத்தது.

முதல் பாதியில் இரண்டு ஸ்டண்ட் காட்சிகளை மட்டும் வைத்தாலும் கூட, படம் எந்த இடத்திலும் ஃபோர் அடிக்காமல் சென்றது.

இரண்டாம் பாதியிலும் ஆக்‌ஷனில் தனிக் கவனம் செலுத்தி, தனது இயக்கத்திறனை வெளிப்படுத்தியிருக்கிறார். முழுக்க முழுக்க ஆக்‌ஷனுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து படத்தினை இயக்கியிருக்கிறார் இயக்குனர்.

அதிகாரம் படைத்தவர்கள், சாதாரண ஏழை எளிய மக்களிடம் தனது பவரை காட்டினால் என்ன மாதிரியான விளைவு ஏற்படும்… என்பதை ஒன் – லைனாகக் கொண்டு படத்தினை இயக்கியிருக்கிறார் இயக்குனர்.

அதிகார உச்சவரம்பு எதுவரை செல்லும் என்பதை கரெண்ட் அரசியல் சாயம் கொண்டு படத்தின் கதையை நன்றாகவே நகர்த்தியிருக்கிறார் இயக்குனர். போலீஸின் வேலைகளையும் கனக்கச்சிதமாக படத்தில் காண்பித்திருக்கிறார் இயக்குனர் அனல் அரசு.

ஒளிப்பதிவும் படத்திற்கு மிகப்பெரும் பலம். அதிலும், ரிங் பைட், சிறைச்சாலை சண்டைக் காட்சி என தனக்கான ஸ்டண்ட் யூனிக் காட்சிகளை மிகத் தரமாக படத்தில் வைத்திருக்கிறார் இயக்குனர் அனல் அரசு.

ஃபீனிக்ஸ் – தரமான ஆக்‌ஷன் திரைப்படம்..

Facebook Comments

Related Articles

Back to top button