
இயக்குநர் ஏ.ஆர்.கே.சரவன் அறிமுகப் படமான ‘மரகத நாணய’த்தின் வெற்றியைத் தொடர்ந்து, ஹிப்ஹாப் தமிழா ஆதி நடிப்பில், சமீபத்தில் வெளியான ‘வீரன்’ என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார்.
பெரிதான வெற்றியை இப்படம் பெறத் தவறிவிட்டது. இதனால், தனது வெற்றிபெற்ற முதல் படமான மரகத நாணயம் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க முடிவு செய்துள்ளார் இயக்குனர் இயக்குநர் ஏ.ஆர்.கே.சரவன்..
இது குறித்து இயக்குநர் ஏ.ஆர்.கே.சரவன் கூறும்போது, “இயக்குநராக எனது பயணத்தை மிகுந்த அன்புடனும் வெற்றியுடனும் வளர்த்த ஒட்டுமொத்த திரையுலக நண்பர்களுக்கும், பத்திரிக்கை-ஊடக நண்பர்களுக்கும், திரைப்பட ஆர்வலர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நான் இப்போது வரிசையாக பல படங்களில் பிஸியாக இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். முன்னணி நடிகர்களான ஆதி மற்றும் நிக்கி கல்ராணி உட்பட அதே நட்சத்திரக் குழுவைக் கொண்ட ‘மரகத நாணயம்’ படத்தின் இரண்டாம் பாகத்தை அடுத்து இயக்க இருக்கிறேன். இது முடிந்தவுடன் விஷ்ணு விஷால் மற்றும் சத்யஜோதி ஃபிலிம்ஸுடன் இணைந்து ஒரு ஃபேண்டஸி படம் இயக்குகிறேன்” என்றார்.