
செக்கச்சிவந்த வானம் படத்திற்கு பிறகு மணிரத்னம் இயக்கவிருக்கும் படம் ‘பொன்னியின் செல்வன்’.
கல்கியின் வரலாற்று புனைவான ‘பொன்னியின் செல்வன்’ நாவலை தழுவி இப்படம் உருவாக இருக்கிறது. அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய், கார்த்தி, ஜெயம்ரவி, விக்ரம், பார்த்திபன், அனுஷ்கா ஷெட்டி, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் என பல நட்சத்திரங்களின் பெயர்கள் இந்த படத்தில் நடிக்க போவதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில், பொன்னியின் செல்வன் படத்தின் படப்பிடிப்பை தாய்லாந்தில் நடத்த திட்டமிட்டு இருக்கிறார் மணிரத்னம். 100 நாட்கள் கொண்ட ஒரே ஷெட்யூலில் படத்தை முடிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பொன்னியின் செல்வனை தாய்லாந்தின் அடர்ந்த காடுகளுக்குள் படமாக்க உள்ளார்கள்.
படத்தில் ஏராளமான குதிரைகள், யானைகள் வைத்து படமாக்கவிருப்பதால் தாய்லாந்து லொகேஷனை தேர்வு செய்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.