
சென்னை: அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகத்தில் சுமார் 15 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, வேலூர், ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது.
சென்னையை பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சேலம் மாவட்டம் ஓமலூரில் 6 செ.மீ., மேட்டூர் 4. செ.மீ. மற்றும் அதிராமபட்டினத்தில் 3 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.
Facebook Comments


