
அக்டோபர் மாதம் 21ஆம் தேதி தமிழகத்தில் உள்ள விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய சட்டசபை தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி தேதி செப்டம்பர் 30 என்றும், வேட்பு மனுக்கள் பரிசீலனை அக்டோபர் 1 என்றும் வேட்பு மனுக்களை வாபஸ் பெற கடைசி நாள் அக்டோபர் 3 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 24ல் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Facebook Comments