Spotlightசினிமா

இந்திய அளவில் மாஸ் காட்டிய சூர்யா ரசிகர்கள்.. விண்ணை தொடும் ‘NGK’கட்-அவுட்!

விஜய் – அஜித் ரசிகர்கள் வைத்த கட்-அவுட் இரண்டையும் முறியடிக்கும் விதமாக சூர்யா ரசிகர்கள் உயரமான கட்அவுட் ஒன்றை தயார் செய்துள்ளனர் சூர்யா ரசிகர்கள்.

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா- சாய் பல்லவி நடித்திருக்கும் என்.ஜி.கே படம் வரும் 31அன்று வெளியாக இருப்பதால் அதனை கொண்டாடும் விதமாக சூர்யாவின் ரசிகர்கள் இந்த ஏற்பாட்டை செய்துள்ளனர். தற்போது இந்த புகைப்படம் சமூகவலைதளங்களில் படுவைரலாக பரவி வருகிறது.

215 அடி கொண்ட இந்த கட்-அவுட் திருத்தணியில் வைக்கப்பட்டுள்ளது. அங்குள்ள சூர்யா ரசிகர்கள் இதை ஏற்பாடு செய்துள்ளது.

மிகப்பெரும் எதிர்பார்ப்பில் இப்படம் பார்க்கப்படுவது நிதர்சனமான உண்மை.

Facebook Comments

Related Articles

Back to top button