
ஆரா சினிமாஸ் மகேஷ் தயாரிப்பில் சிபிராஜ் நடிப்பில் உருவாக இருக்கிறது “ரேஞ்சர்”.
“ஆவ்னி” எனும் புலி பல மனிதர்களை உயிருடன் அடித்து சாப்பிட்ட சம்பவம் நாடு முழுதும் சர்ச்சையை கிளப்பியது. மகாராஷ்டிரா மாநிலத்தில் யாவாத்மல் மாவட்டதில் நடைபெற்ற இந்த உண்மைச் சம்பவத்தினை அடிப்படையாக கொண்டு உருவாகும் படம் தான் “ரேஞ்சர்”
“பர்மா” , “ராஜா ரங்குஷ்கி” “ஜாக்சன் துரை “ போன்ற படங்களின் இயக்குநர் தரணிதரன் இப்படத்தினை எழுதி இயக்குகிறார். சிபிராஜ் நாயகனாக நடிக்க, ரம்யா நம்பீசன், மது ஷாலினி ஆகிய இருவரும் முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
அரோல் கரோலி இப்படத்திற்கு இசையமைக்கிறார். கல்யாண் வெங்கட்ராமன் ஒளிப்பதிவை மேற்கொள்ள சிவா நந்தீஸ்வரன் எடிட்டிங் செய்கிறார்.
படத்தின் முன் தாயாரிப்பு பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. மிகவிரைவில் படத்தின் ஷூட்டிங் துவங்க உள்ளது.
Facebook Comments