Spotlightசினிமாதமிழ்நாடு

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் நடிகர் ரிஷி ரித்விக் மகள் சாதனை..!

ட்டு படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகர் ரிஷி ரித்விக். தனது திறமை மூலம் தொடர்ச்சியாக அடுத்தடுத்த படங்களில் நடித்து, தமிழ் சினிமாவில் தற்போது தவிர்க்க முடியாத ஒரு நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இவரது மகளான நதுவிஷா சென்னை அண்ணா நகரில் உள்ள ஜெஸ்ஸி மோசஸ் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். நடந்து முடிந்த பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் இவர், 500 மதிப்பெண்களுக்கு சுமார் 491 மதிப்பெண்கள் எடுத்து பள்ளியிலேயே முதலாம் இடத்தைப் பிடித்திருக்கிறார்.

பள்ளிக்கு மட்டுமல்ல தனக்கும் தங்களது குடும்பத்திற்கும் மிகப்பெரும் மகிழ்ச்சியையும் கெளரவத்தையும் தங்களது மகள் ஏற்படுத்திக் கொடுத்திருப்பதாக ரிஷி ரித்விக் மகிழ்ச்சிபட தெரிவித்துள்ளார்.

கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியில் என மூன்று பாடங்களிலும் தலா 99 மதிப்பெண்களை பெற்றிருக்கிறார்.

 

Facebook Comments

Related Articles

Back to top button