Spotlightசினிமா

வெங்கி அட்லூரி படத்தில் சூர்யாவிற்கு ஜோடியானார் மமீதா பைஜூ

சித்தாரா என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம், ‘புரொடக்ஷன் நம்பர் 33 – #சூர்யா 46 ‘ எனும் திரைப்படத்தின் தொடக்க விழா பூஜையானது ஹைதராபாத்தில் நடைபெற்றது.

இது தமிழ் – தெலுங்கு என இரு மொழி திரைப்படமாக உருவாக இருக்கிறது.

சூர்யா- வெங்கி அட்லூரி இருவரும் கைகோர்க்கின்றனர்.

இயக்குநர் வெங்கி அட்லூரியின் இயக்கத்தில் உருவான ‘ சார் /வாத்தி’ , ‘லக்கி பாஸ்கர்’ ஆகிய சமீபத்திய படங்கள் தொடர்ச்சியான வெற்றியை பெற்றிருக்கிறது.

‘பிரேமலு ‘ படத்தின் மூலம் ரசிகர்களின் விருப்பத்திற்குரிய நடிகையான மமீதா பைஜூ கதாநாயகியாக இணைகிறார். இவருடன் ரவீனா டாண்டன் தெலுங்கு சினிமாவில் மீண்டும் மறுபிரவேசம் செய்கிறார். இவர்களுடன் ராதிகா சரத்குமார் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

ஜீ.வி. பிரகாஷ் குமார் படத்திற்கு இசையமைக்கிறார்.

படத்தின் ஒளிப்பதிவை நிமிஷ் ரவி மேற்கொள்ள, படத்தொகுப்பு பணிகளை நவீன் நூலி கவனிக்கிறார். தயாரிப்பு வடிவமைப்பு பணிகளை பங்களான் ஏற்றுக் கொள்கிறார்.

எஸ். நாகவம்சி மற்றும் சாய் சௌஜன்யா ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்.

2026 ஆம் ஆண்டில் கோடை விடுமுறையில் வெளியிட திட்டமிடப்பட்டிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு மே மாத இறுதியில் தொடங்குகிறது.

நடிகர்கள் : சூர்யா, மமீதா பைஜூ, ரவீனா டாண்டன், ராதிகா சரத்குமார்.

தொழில்நுட்பக் குழு :

எழுத்து & இயக்கம் : வெங்கி அட்லூரி
தயாரிப்பாளர்கள் : எஸ். நாக வம்சி – சாய் சௌஜன்யா
இசை : ஜீ. வி. பிரகாஷ் குமார்
ஒளிப்பதிவு : நிமிஷ் ரவி
படத்தொகுப்பு : நவின் நூலி
தயாரிப்பு வடிவமைப்பு : பங்களான்
சண்டை பயிற்சி : வி. வெங்கட்
நடன இயக்குநர் : விஜய் பின்னி
நிர்வாகத் தயாரிப்பாளர் : யலமஞ்சிலி கோபாலகிருஷ்ணா
லயன் புரொடியூசர் : உமா மகேஸ்வர் ராவ்
தயாரிப்பு நிறுவனம் : சித்தாரா என்டர்டெய்ன்மென்ட் – ஃபார்ச்சூன் போர் சினிமாஸ்
வழங்குபவர்கள் : ஸ்ரீகாரா ஸ்டுடியோஸ்.

Facebook Comments

Related Articles

Back to top button