
இறுதி சுற்று படத்திற்கு பின்னர் தமிழில், விஜய் சேதுபதியுடன் ‘ஆண்டவன் கட்டளை’, லாரன்சுடன் ‘சிவலிங்கா’ போன்ற படத்தில் நடித்தவர் ரித்திகா சிங். தற்போது தமிழில் அரவிந்த் சாமி நடித்து வரும் ‘வணங்காமுடி’ படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இதுவரை படங்களில் கூட கவர்ச்சி காண்பிக்காத ரித்திகா, சமீபத்தில் ஒர்க் அவுட் செய்துவிட்டு சிக்ஸ் பேக் தெரியும்படி போஸ் கொடுத்து அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதனை கண்ட பலர் விரும்பி வந்தாலும், ஒரு சிலரோ உங்களிடம் இருந்து இதை எதிர்பார்க்கவில்லை என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.
Facebook Comments





