
உலகம் முழுவதும் கொரோனாவின் பாதிப்பு அதிகரித்து வருகிறது. நாளுக்கு நாள் இறப்பு விகிதமும் அதிகரித்து வருகிறது..
இந்தியாவில் கொரோனா பாதிப்பு உச்சம் தொட்டுக் கொண்டுதான் இருக்கிறது.
இந்நிலையில், மத்திய சுகாதாரத்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், இந்தியாவில் குணமடைவோர் விகிதம் உயர்ந்துள்ளதாக அறிவித்துள்ளது.
இந்தியாவில் குணமடைவோர் விகிதம் 55.49% ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் இதுவரை 2.27 லட்சம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
Facebook Comments





