Spotlightசினிமா

சான்றிதழ் – விமர்சனம் 2.25/5

ஜெயச்சந்திரன் இயக்கத்தில் ஹரிகுமார், ரோஷன் பஷீர், ராதாரவி, அபு கான், ரவி மாரியா, மனோபாலா, அருள் தாஸ், ஆதித்யா கதிர், கெளசல்யா உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகி வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் “சான்றிதழ்”…

உலகமே திரும்பி பார்க்கும்படியாக, எந்த வித தீங்கும் நிகழாமல் ஒரு கிராமம் இருக்கிறது. அந்த ஊருக்குள் யாரையும் விடாமல், அக்கிராம மக்கள் ஒழுக்கமாகவும், நிம்மதியாகவும் இருந்து வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம் கருவறை என்ற கிராமம் தான் அது.

சிறந்த கிராமத்திற்கான விருது ஒன்று கருவறை கிராமத்திற்கு மத்திய அரசால் அறிவிக்கப்படுகிறது. அந்த விருதை கிராமத்திற்கு வந்து தந்தால் மட்டுமே பெற்றுக் கொள்வோம் என்று கூறிவிடுகிறார்கள் கிராம மக்கள்.

இதற்காக பேசச் செல்லும் அமைச்சர் ராதாரவியை அவமானப்படுத்தி அனுப்பி விடுகின்றனர் கிராம மக்கள்.

அதன்பிறகு, ஊருக்குள் சிலர் ஊடுருவி விடுகின்றனர். அவர்களால் என்ன நடந்தது.? இந்த கிராமம் இப்படியாக மாறுவதற்கு யார் காரணம் என்பதே படத்தின் மீதிக் கதை.

கருவறை கிராமம் சுத்தமாக மாறுவதற்கு காரணமாக இருந்த வெள்ளைச்சாமி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ஹரிகுமார். தனக்கே உரித்தான உடல் மொழியில் நடித்து கவர்ந்திருந்தார் நடிகர் ஹரிகுமார்.

ஆங்காங்கே, வசனங்களை மெதுவாக பேசியது சற்று எரிச்சலடைய வைத்தது. ஒருகாலகட்டத்தில் ஹீரோயினாக நடித்து தமிழ் சினிமாவை கலக்கிக் கொண்டிருந்த கெளசல்யா, சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்து தனது இமேஜை இப்படி குறைத்துக் கொள்ள காரணம் என்னவோ.?

ரோஷன் பஷீர் நாயகனாக நடித்து அசத்தியிருக்கிறார். ஆஷிகா அழகாக வந்து காட்சிகளில் மிளிர்கிறார்..

ஆதித்யா கதிரின் காமெடி காட்சிகள் படத்திற்கு நடுவே ஆங்காங்கே சிரிப்பலையை எட்டிப் பார்க்க வைத்தது.

மனோபாலா, ராதாரவி, ரவி மரியா உள்ளிட்டோர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டத்தை செய்திருக்கிறார்கள். இப்படி ஒரு கிராமம் இருந்தால் எப்படி இருக்கும் என்று ஏங்க வைக்கும் இடத்தில் தான் இயக்குனர் ஜெயித்திருக்கிறார். இப்படியெல்லாம் ஒன்று நடக்காது என்பது இயக்குனருக்கு மட்டுமல்லாது அனைவருக்கும் தெரிந்த வெளிச்சம் தான்..

பாடல்கள் மற்றும் பின்னணி இசை ஓகே ரகம் தான். ஒளிப்பதிவு கவனம் பெறுகிறது.

முதல் பாதி முழுவதும் ஒரு கதையும், இரண்டாம் பாதி முழுவதும் ஒரு கதையுமாக நகர்கிறது.

பெரிதான ஈர்ப்பை எட்ட முடியாதது படத்திற்கு விழுந்த சறுக்கல்.,

சான்றிதழ் – தவற விட்டுவிட்டது…

Harikumar – Vellasami
Roshan bhashir – Pichai
Datuk. Ratha ravi – Control kanthasami
Abu khan – Durai
Ravimariya – Mannumootai
Manobala – Pollathavan
Aruldass – Veera
Kowsalya – Sangeetha
Ashika Ashokan – Sowmya
Tanisha. Kuppanda – Alli
Adithya kathir – Meen
Kajal Pasupathi – Aravalli
Uma shree – Suravalli

CREW:

Written & Director: Jayachandran (JVR)
Cinematography: S.S.RavimaaranShivan.D.F.T
Music director: Baiju jacob
Editor: J.F.Castro
Art director: :Nanjil P. S. Robert
Stunts: Danger mani
Lyricist: JVR
Choreographers: : P. V. Noble.Dhina.I. Radhika
Sound Designer: UkI. Ayyappan(G Studios)
Sound Efx: Randy Raj
Vfx Desginer: Hocus pocus V

Facebook Comments

Related Articles

Back to top button