
சபரிமலையில் பெண்களையும் அனுமதித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்தத் தீர்ப்புக்கு எதிராக கேரளாவில் தொடர் போராட்டங்கள் நடைபெறுகின்றன. ஐயப்ப தரிசனத்துக்காக செல்லும் பெண்கள் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்படுகின்றனர்.
அசம்பாவிதங்களை தவிர்க்க கேரள போலீசார் பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். நிலக்கல், பம்பை, பத்தினம்திட்டா, சன்னிதானம் பகுதிகளில் 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டது.
பக்தர்கள் சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர். 144 தடை இன்று நள்ளிரவில் முடிவடைகிறது. இந்நிலையில், நாளை நள்ளிரவு வரை 144 தடையை நீட்டித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.
Facebook Comments