சினிமா

‘இருட்டு’ அறையில் இருக்கும் தமிழ் சினிமாவை ‘நரை’ வாழவைக்கும்… சங்கிலி முருகன் பெருமிதம்!

 

K7 ஸ்டுடியோஸ் தயாரிப்பில் விவி இயக்கத்தில் உருவாகியுள்ளது ‘நரை’. சங்கிலி முருகன், சந்தானபாரதி, “ஜூனியர்” பாலையா, நளினிகாந்த், ஞானவேல், அழகு, விஜய்கிருஷ்ணராஜ், மகாநதி சங்கர், துரை சுதாகர், பெருமாள் காசி மற்றும் அனுப் ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

வெவ்வேறு காரணங்களுக்காக குடும்பத்தினரால் ஒதுக்கப்பட்ட ஏழு முதியவர்கள், ஆதரவற்றோர் இல்லத்தில் வாழ்ந்து வருகிறார்கள். அங்கே, மகிழ்ச்சியாக கழிந்து கொண்டிருக்கும் இவர்களது வாழ்க்கையை ஒரு அதிர்ச்சியான சம்பவம் தலைகீழாக மாற்றிப் போடுகிறது.

அந்த சம்பவத்திற்கும், முதியவர்களுக்கும் என்ன தொடர்பு? அந்த சம்பவம் யாரால் நிகழ்த்தப்படுகிறது?, அவர்களை இந்த முதியவர்கள் என்ன செய்தார்கள்? என்பதை திடுக்கிட வைக்கும் திருப்பங்களுடனும், முடிச்சுகள் நிறைந்த திரைக்கதையுடனும் விறுவிறுப்பாக சொல்லியிருக்கிறார் இயக்குநர் விவி.

இவர்களுடன் ரோஹித் என்னும் புதுமுக நாயகனும், லீமா மற்றும் ஈதன் ஆகிய இரண்டு கதாநாயகிகளும் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள்.

இந்த படத்தின் ஒளிப்பதிவாளர் சினு சித்தார்த் சமீபத்தில் கண் சிமிட்டல் மூலம் வைரலான பிரியா வாரியர் நடித்துள்ள “ஒரு அடார் லவ்” படத்தின் ஒளிப்பதிவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் நடிகர் சங்கிலி முருகன் பேசும்போது, ’இருட்டு அறையில் இருண்டு கிடக்கும் தமிழ் சினிமாவை நரை வாழவைக்கும்’ என்று மிகவும் பெருமையுடன் கூறினார்.

வழக்கமாக இளம் கதாநயகர்கள் வில்லன்களிடம் மோதுவதையே பார்த்துப் பழகிப்போன தமிழ் ரசிகர்களுக்கு, வயதான முதியவர்கள் வில்லன்களிடம் மோதுவது நிச்சயம் புதுமையான அனுபவமாக இருக்கும். அதே சமயத்தில் நெஞ்சை நெகிழ வைக்கும் உருக்கமான காட்சிகளுடன் இத்திரைப்படம் உருவாகியுள்ளது.

தொழில்நுட்பக் கலைஞர்கள்

ஒளிப்பதிவாளர் : சினு சித்தார்த்

இசையமைப்பாளர் : அனிருத் விஜய்

படத்தொகுப்பு : அச்சு விஜயன்

பாடல்கள் : பிரகா, மொபின்

நடனம் : B. சந்தோஷ்

சண்டைப் பயிற்சி : “டேஞ்சர்” மணி

இணை தயாரிப்பு : Dr. ஹேமா சரவணன்

தயாரிப்பு : P. கேசவன்

எழுத்து & இயக்கம் : விவி

Facebook Comments

Related Articles

Back to top button