Spotlightசினிமா

’வெள்ளை யானை’க்கு இசை கொடுக்கும் சந்தோஷ் நாராயணன்!

சீடன் படத்திற்கு பிறகு சுப்பிரமணியம் சிவா இயக்கும் படம் ‘வெள்ளை யானை’. சமுத்திரக்கனி இப்படத்தில் நாயகனாக நடித்துள்ளார்.

இந்த வெள்ளையானை திரைப்படத்தை “WHITE LAMB TALKIES ” நிறுவனம் சார்பில் S .வினோத் குமார் தயாரிக்கிறார் . இந்த படத்தில் சமுத்திரக்கனிக்கு ஜோடியாக நடிகை ஆத்மியா நடித்துள்ளார் .

தற்போது இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க ஒப்பந்தமாகியுள்ளார் .முழு படத்தையும் பார்த்த சந்தோஷ் நாராயணன் படம் தனக்கு மிகவும் பிடித்திருப்பதாகவும் , இன்றைய விவசாயிகளோட வாழ்க்கையின் மிக முக்கியமான வரலாற்றுப்பதிவு, நம் தாய் மண்ணின் இசையோடு இந்த படத்திற்கு இசையமைக்க மகிழ்ச்சியாக இருப்பதாகவும் கூறியுள்ளார் .

இந்த படத்தில் யோகிபாபு , E .ராமதாஸ் , மூர்த்தி ( இயக்குனர் ) ,SS ஸ்டான்லி ,பாவா செல்லதுரை ,’சாலை ஓரம் ‘ ராஜு ஆகியோர் நடித்துள்ளனர் .

படத்தொகுப்பு – AL ரமேஷ் , கலை இயக்கம் ஜெகதீசன் , ஒளிப்பதிவாளர் வேல்ராஜிடம் உதவியாளராக இருந்த விஷ்ணு ரங்கசாமி இப்படத்திர்ற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். சண்டைக்காட்சிகளை திலீப் சுப்பராயனின் தம்பி தினேஷ் சுப்பராயன் மேற்கொண்டுள்ளார்.

Facebook Comments

Related Articles

Back to top button