
பெங்களூருவில் இருந்து சென்னை வந்த விமானப் பயணத்தின்போது நடிகர் ரஜினிகாந்தை எதிர்பாராத விதமாக சந்தித்த மகிழ்ச்சியான தருணத்தை நடிகர் சரத்குமார் பகிர்ந்துள்ளார்.
இந்த சந்திப்பின்போது இருவரும் தங்களது பணி மற்றும் படப்பிடிப்பு அட்டவணைகள் குறித்து பேசிக் கொண்டதாக சரத்குமார் தெரிவித்துள்ளார். மேலும், மைசூரில் தங்களது வேலைகள் குறித்தும் இருவரும் உரையாடியதாக அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
சென்னை வந்தடைந்த பின்னர் ரசிகர்கள் மற்றும் அன்பர்களுடன் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டதையும் நினைவுகூர்ந்த சரத்குமார், “இன்று நாம் யாராக இருக்கிறோமோ, எந்த நிலையில் இருக்கிறோமோ அதற்கு ரசிகர்களும் மக்களுமே காரணம்” என்ற கருத்தையும் தனது பதிவில் பகிர்ந்துள்ளார்.
ரஜினிகாந்துடன் செலவிட்ட இந்த தருணம் மிகவும் மகிழ்ச்சியான, என்றும் நினைவில் வைத்துக்கொள்ளக்கூடிய சந்திப்பாக அமைந்ததாக சரத்குமார் தெரிவித்துள்ளார்.
ரஜினிகாந்துடன் சரத்குமார் எடுத்துக்கொண்ட செல்ஃபியும் தற்போது சமூக வலைதளங்களில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.





