Spotlightசினிமா

தலைமுடிக்குப் பின்னால் மறைந்திருக்கும் மிகப்பெரிய நிழல் வணிகம்! – வெற்றியின் ‘பிளாக் கோல்டு’!

உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு, நடிகர் வெற்றி நடிப்பில் உருவாகியுள்ள ‘பிளாக் கோல்டு’ திரைப்படம் நவம்பர் 13ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

எம்.எம். ஸ்டூடியோஸ் சார்பில் எம். மூர்த்தி தயாரித்துள்ள இப்படத்தை தீரன் அருண்குமார் இயக்கியுள்ளார். வெற்றியுடன் லிவிங்ஸ்டன், ப்ரியாலயா, துளசி, அபிராமி, ஏ. வெங்கடேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

மனிதர்களின் தலைமுடியை மையமாகக் கொண்டு இயங்கும் மிகப்பெரிய வணிகமும், அதன் பின்னணியில் உள்ள நிழல் உலகமும் ஒரு நடுத்தரக் குடும்ப இளைஞனின் வாழ்க்கையை எவ்வாறு பாதிக்கிறது என்பதே படத்தின் கதைக்களம்.

படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய நடிகர் வெற்றி, “பிளாக் கோல்டு என்றால் கச்சா எண்ணெய் அல்லது மிளகு என்று நினைக்கலாம். ஆனால் இந்தப் படம் தலைமுடிக்குப் பின்னால் இருக்கும் மிகப்பெரிய வணிகத்தைப் பேசுகிறது. அப்பா – மகன் உறவையும் உணர்வுபூர்வமாகச் சொல்லியிருக்கிறோம்” என்றார்.

இயக்குநர் தீரன் அருண்குமார் பேசுகையில், “பல தடைகளைக் கடந்து இந்தப் படத்தை உருவாக்கியுள்ளோம். சிறிய படம், பெரிய படம் என்பதைவிட நல்ல கதைக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

மேலும், இப்படத்தில் நடிகை அபிராமி துணிச்சலான காவல்துறை அதிகாரியாகவும், நகைச்சுவை நடிகர் ஜப்பான் குமார் மாறுபட்ட தீவிரமான கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.

சந்தோஷ் குமார் வீராசாமி ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு கவாஸ்கர் அவினாஷ் இசையமைத்துள்ளார்.

வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகியுள்ள ‘பிளாக் கோல்டு’ நவம்பர் 13ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

Facebook Comments

Related Articles

Back to top button