Spotlightசினிமா

கேரள நிவாரண நிதியாக சூர்யா-கார்த்தி வழங்கிய 25 லட்சம்!

கேரளாவில் வெள்ளப்பெருக்கு மற்றும் மண் சரிவால் எட்டு மாவட்டங்கள் பாதிக்கப்பட்டு மக்கள் மிகவும் துயரத்துக்குள்ளாகியுள்ளது .கேரளா அரசு மீட்பு மற்றும் பாதுகாப்பு பணிகளை மேற் கொண்டு வருகிறது இந்நிலையில் கேரளா முதல்வர் மாண்புமிகு பிணரயி விஜயன் அவர்கள் நிவாரண நிதி அளித்து உதவுமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இதை அறிந்த நடிகர் சூர்யா மற்றும் கார்த்தி இருவரும் இணைந்து 25 லட்சம் ரூபாய் கேரளா முதல்வரின் நிவாரண நிதிக்கு வழங்குகிறார்கள். எப்பொழுதும் சூர்யா கார்த்தி -க்கு கேரளா மக்களிடம் ஒரு தனி அன்பு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது. கடவுளின் தேசம் என்று புகழப்படும் கேரளாவில் இந்நிலையை கண்டு மனம்வருந்துகிறோம், வெகுவிரைவில் இயல்புநிலை திரும்ப பிராதிக்கிறோம் என்று அவர்கள் கூறியுள்ளனர்.

Facebook Comments

Related Articles

Back to top button