
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்க மிக பிரம்மாண்டமான பொருட் செலவில் உருவாக இருந்த படம் தான் ‘மாநாடு’.
இப்படத்தினை சுரேஷ் காமாட்சி தயாரிக்கவிருந்தார். இந்நிலையில், இந்த படத்தில் இருந்து தான் விலகுவதாக சிம்பு அறிவித்திருந்தார்.
இதனால், தான் கொடுத்த அட்வான்ஸ் பணம் ஒரு கோடி ரூபாயை சிம்பு திருப்பி தர வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்தார் தயாரிப்பாளர்.
இந்த பேச்சுவார்த்தையில் சுமூகம் ஏற்பட்டு தற்போது மீண்டும் மாநாடு படத்தில் தான் நடிப்பதாக சிம்பு அறிவித்துள்ளார். சபரிமலை ஐயப்பனுக்கு மாலை அணிவித்து இதை அவர் தெரிவித்துள்ளார். விரைவில் படப்பிடிப்புக்கு செல்லவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Facebook Comments





