Spotlightஇந்தியாசினிமாதமிழ்நாடு

உலகின் முதல் கொரோனா தடுப்பூசி; அறிமுகம் செய்தார் ரஷ்ய அதிபர் புதின்!

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி, லட்சக்கணக்கான உயிர்களை பலி வாங்கியது. கோடிக்கணக்கில் மக்கள் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், அனைத்து நாடுகளும் இந்த வைரஸுக்கு எதிராக தடுப்பூசி தயாரிக்கும் பணியில் மிகவும் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், சற்றுமுன் உலகின் முதல் கொரோனா தடுப்பூசியை நாட்டிற்கு அறிமுகம் செய்து வைத்தார் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின்.

மனிதர்கள் மீதான பரிசோதனை வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளதாகவும் அவர் அறிவித்தார்.

தனது மகளுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு பரிசோதிக்கப்பட்டது எனவும் கூறினார்.

செப்டம்பர் மாதம் மக்கள் பயன்பாட்டிற்கு இந்த தடுப்பூசி வரும் எனவும் புதின் அறிவித்துள்ளார்.

கொரோனாவிற்கு எதிரான போரில் ரஷ்ய அதிபரின் இந்த அறிவிப்பு புதியமைல்கல்லாக பார்க்கப்படுகிறது.

Facebook Comments

Related Articles

Back to top button