
ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க உருவாகியுள்ளது ‘தர்பார்’. இப்படம் வரும் பொங்கல் கொண்டாட்ட வெளியீடாக வர இருக்கிறது.
இதனைத் தொடர்ந்து சிறுத்தை சிவா இயக்க, சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறார் ரஜினிகாந்த். இதன் படப்பிடிப்பு விரைவில் துவங்கப்பட்டவிருக்கிறது.
இந்நிலையில், ரஜினிகாந்தின் அடுத்த படத்தை நடிகர் கமல்ஹாசனின் நிறுவனமான ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த படத்தை கைதி படத்தை இயக்கி தற்போது ‘தளபதி 64’ படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்குவார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
Facebook Comments





