
கார்த்தி, கீர்த்தி செட்டி, சத்யராஜ், ராஜ்கிரன்,பி எல் தேனப்பன், ஆனந்தராஜ், நிழல்கள் ரவி, ராஜ் திலக், ஜி எம் சுந்தர், கருணாகரன் ,யார் கண்ணன், நிவாஸ் ஆதித்தன், வித்யா இவர்களின் நடிப்பில் நலன் குமாரசாமி அவர்களின் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் வா வாத்தியார்.
இப்படத்தை கே ஈ ஞானவேல் ராஜா தயாரித்திருக்கிறார். ஜார்ஜ் சி வில்லியம்ஸ் அவர்கள் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார்.
கதைக்குள் பயணித்து விடலாம்..
தீவிர எம்ஜிஆர் ரசிகரான ராஜ்கிரன், எம்ஜிஆர் உடல்நலம் குறைவுபட்டு மருத்துவமனையில் இருக்கும்போது அவரை பார்க்க முடியாமல் வேதனை அடைகிறார் அப்போது அவர் நடித்த திரைப்படங்களை போட்டு பார்த்து ரசித்துக் கொண்டிருக்கிறார் ராஜ்கிரண். அந்த சமயத்தில் ராஜ்கிரனுக்கு பேரன் பிறக்கிறார். பேரன் பிறந்த நேரத்தில் எம்ஜிஆர் இறந்து போகிறார். அதனால் எம்ஜிஆர் ஏ திரும்ப வந்திருப்பதாக நினைத்து தனது பேரனுக்கு எம்ஜிஆர் போல் வித்தைகளை கற்றுக் கொடுத்து வளர்க்கிறார்.
பேரனாக கார்த்தி. எம்ஜிஆர் போல் அனைவருக்கும் உதவி செய்து ஒரு போலீஸ் அதிகாரியாக உயர வேண்டும் என்று ராஜ்கிரானால் வளர்க்கப்பட்ட கார்த்தி, பின்னாளில் எம்ஜிஆருக்கு நேர் எதிராக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். இதையெல்லாம் கண்ட ராஜ்கிரன் தனது பேரனை திருத்தும் படி எம்ஜிஆர் இடம் வேண்டிக்கொண்டு இறந்தும் போகிறார். அதன் பிறகு என்ன நடந்தது என்பதே படத்தின் மீதி கதை.
எந்த கதை கொடுத்தாலும் கதாபாத்திரமாகவே தன்னை மாற்றிக் கொள்ளும் திறன் படைத்தவர் நடிகர் கார்த்தி. இந்தப் படத்திலும் எம்ஜிஆர் ரசிகனாகவே, இல்லை இல்லை எம்ஜிஆர் ஆகவே வாழ்ந்து அக்கதாபாத்திரமாகவே தன்னை மாற்றிக் கொண்டிருக்கிறார் கார்த்தி. எம்ஜிஆர் நடித்த ஒவ்வொரு படத்தில் இருந்தும் அதன் ஸ்டைலை நன்றாகவே கற்றுக்கொண்டு இப்படத்தில் அதனை சரியாக முறையில் பயன்படுத்தியிருக்கிறார். நாயகி கிருத்தி ஷெட்டிக்கு பெரிதான கதாபாத்திரம் இல்லை என்றாலும் தனக்கு கொடுக்கப்பட்டதை அழகாக செய்து முடித்து இருக்கிறார்.
மேலும் படத்தில் நடித்த சத்யராஜ், பி எல் தேனப்பன், ஆனந்தராஜ், கருணாகரன், ஜி எம் சுந்தர் உள்ளிட்ட நடிகர்கள் அனைவருமே தங்களுக்கு கொடுக்கப்பட்டதை அளவாக செய்து கொண்டு முடித்து இருக்கின்றனர். ராஜ்கிரனின் நடிப்பு படத்திற்கு பெரும் பலமாக இருந்தது. சந்தோஷ் நாராயணன் அவர்களின் இசை ஒரு பில்லர் ஆக படத்தை ரசிக்க வைத்திருந்தது.
ஜார்ஜ் சி ஸ்ரீ வில்லியம்ஸ் அவர்களின் ஒளிப்பதிவு படத்தினை கலர்ஃபுல்லாக கொண்டு செல்வதற்கு கை கொடுத்துள்ளது. முழுக்க முழுக்க எம்ஜிஆர் ரசிகனாகவே இப்படத்தை இயக்கி முடித்திருக்கிறார் இயக்குனர் நலன் குமாரசாமி. எம்ஜிஆர் ரசிகர்கள் அனைவரும் கட்டாயம் ரசிக்கும் படமாக இப்படம் இருக்கிறது என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.





