Spotlightசினிமா

’மஹா’வில் இளவரசியாக ஹன்சிகா!

ஹன்சிகா மோத்வானி நடித்த “மஹா” படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்கள் நேற்று வெளியானது. இப்படத்தை இயக்கியிருக்கிறார் அறிமுக இயக்குனர் யூ.ஆர்.ஜமீல்.

“படத்தின் டைட்டிலில் இளவரசி என்ற ஒரு பட்டத்தை ஹன்சிகாவிற்கு வழங்கியிருக்கிறோம். ஆம். ஒரு இளவரசியின் அடிப்படைக் கூறுகள் வசீகரம், அழகு மற்றும் மரியாதை. இந்த ஹால்மார்க் குணங்கள் மூலம் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறார் ஹன்சிகா. நாயகி மையப்படுத்திய படங்களை கொடுக்கும் அளவுக்கு கமெர்சியல் மார்க்கெட்டை வைத்திருக்கிறார் ஹன்சிகா. நாயகியை மையப்படுத்திய படங்களில் நடிக்க அவர் எடுத்திருக்கும் முடிவு, அவரின் அசாதாரண திறமையால் நிச்சயம் பலன் அளிக்கும். இந்த படத்தில் பல குணங்களை கொண்ட மிக சவாலான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் ஹன்சிகா.

மிகவும் வைரல் ஆன கண்ணாடி போஸ்டர் உண்மையில் சொல்வது, “கண்ணாடியில் நீங்கள் பார்ப்பது அப்படியே உண்மை இல்லை, இது மாறும்” என்பது தான். இதன் அடிப்படையில் தான் அந்த கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டிருக்கும். லக்ஷ்மன் போன்ற ஒரு ஒளிப்பதிவாளர், ஜிப்ரான் போன்ற ஒரு இசையமைப்பாளர் நல்ல படம் கொடுக்கும் எனது முயற்சிக்கு ஆதரவாக இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. நிச்சயம் நல்ல படமாகவும், வணிக ரீதியில் வெற்றி படமாகவும் அமையும் என நம்புகிறேன். நல்ல திறமையாளர்களை கண்டு, அவர்களுக்கு வாய்ப்பளிக்கும் எட்செட்ரா எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பாளர் மதி சாருக்கு ஏற்ற வெற்றி இந்த படத்தில் கிடைக்கும்” என்றார்.

Facebook Comments

Related Articles

Back to top button