Spotlightசினிமா

சிம்புவுடன் நடிப்பதே எனது லட்சியம் – தேவயானி ஷர்மா

டெல்லியை பூர்விகமாக கொண்ட நடிகை தேவயானி ஷர்மா, ஹிந்தி மற்றும் தெலுங்கு திரையுலகங்களில் வலம் வருகிறார். 2021 ஆம் ஆண்டு , ரொமான்டிக் என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் இணை கதாநாயகியாக திரையுலகத்திற்கு அறிமுகமான இவர் பலவிதமான நாட்டிய கலைகளில் தேர்ச்சி பெற்றிருக்கிறார்.

அவர் கூறுகையில், “ஹிந்தி , தெலுங்கு என்ற மொழிகளில் நான் படங்கள் பண்ணியிருந்தாலும் எனக்கு தமிழில் படம் பண்ண வேண்டும் என்ற ஆசை எப்பொழுதும் உள்ளது. சாதாரண கதாநாயகியாக மட்டுமில்லாமல், என் நடிப்புத் திறனை முழுவதும் செயல்படுத்தி மக்கள் அனைவரும் விரும்பும் ஒரு நடிகையாக வலம் வர வேண்டும். கீர்த்தி சுரேஷ், சாய் பல்லவி இவர்களெல்லாம் எனக்கு மிகவும் பிடித்த நடிகைகள், இவர்கள்தான் எனக்கு முன்னுதாரணம்.

வாழ்வில் என்னுடைய லட்சியம் என்னவென்றால் சிம்புவிற்கு ஜோடியாக நடிப்பதே ஆகும். விரைவில் அதற்கான அறிவிப்பும் வெளிவரும்.” என்று நம்பிக்கையோடு கூறுகிறார் தேவயானி.

Facebook Comments

Related Articles

Back to top button