
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடித்து தயாரித்திருக்கும் படம் தான் “விக்ரம்”.
இப்படம் கடந்த வெள்ளியன்று உலகம் முழுவதும் வெளியானது. வெளியானது முதலே ரசிகர்களால் மட்டுமல்லாது அனைவராலும் பெரிதாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இப்படத்தில் விஜய் சேதுபதி , பஹத் பாசில் இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அனிருத் இசையமைத்திருக்கிறார்.
இன்னமும் அரங்குகள் நிறைந்த காட்சிகளாக படம் ஓடிக் கொண்டிருக்கிறது.
படத்தின் வெற்றியைக் கொண்டாடும் விதமாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்களுக்கு, உலகநாயகன் கமல்ஹாசன் விலையுயர்ந்த ”லெக்சஸ்” கார் ஒன்றை பரிசளித்துள்ளார்.
இந்த போட்டோ தற்போது இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.
Facebook Comments





