
இயக்குனர் அலி அப்பாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிக்க உருவாகியுள்ளது பாரத். இப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியானது.
நல்ல ஒரு வரவேற்பை பெற்றுள்ள இப்படத்தின் நிகழ்விற்காக தனியார் ஹோட்டலுக்கு வந்திருந்த சல்மான் கானை ரசிகர்கள் சூழ்ந்து கொண்டனர்.
அங்கிருந்த பெண்கள், குழந்தைகள் அவரிடம் ஏதோ கேட்க அவர், நடந்து கொண்டே பதிலளித்துக் கொண்டிருந்தார். சல்மான் கானின் பாதுகாவலர் அவர்களை தள்ளி விட, இதை சற்றும் எதிர்பாராத சல்மான் கான் அவரை கன்னத்தில் அறைந்தார். இந்த வீடியோ தற்போது பெரும் வைரலாகி வருகிறது.
Omg, @BeingSalmanKhan literally slapped a security guard for getting rough with a fan kid! #Bharat #SalmanKhan pic.twitter.com/05VFSRecmP
— ️️ ️️️️️️️️️ ️️ ️️ ️️ (@heartgetshurt) June 5, 2019
Facebook Comments





