
பிரபல தொலைக்காட்சிக்கு மட்டுமல்லாமல் பல சினிமா நிகழ்ச்சிகளுக்கும் தொகுப்பாளினியாக வருபவர் ரம்யா.. இவர் தற்போது விஜய் நடிப்பில் உருவாகி வரும் மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார்.
இவர் சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமானவர். சில தயாரிப்பு நிறுவனங்களிலும் பணியாற்றியுள்ளார்.
திருமணமாகி ஒரே வருடத்தில் விவாகரத்து பெற்று, மீண்டும் தொகுப்பாளினியாக பணியாற்றி வரும் ரம்யா, தற்போது நடிப்பதிலும் தீவிரம் காட்டி வருகிறார்.
அவ்வப்போது, விதவிதமாக போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுபவர், சில சமயத்தில் கவர்ச்சியான உடை அணிந்த புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். இதனால், ரசிகர்களின் எதிர்ப்புக்கு ஆளாகும் ரம்யா, தற்போது கவர்ச்சியான உடை அணிந்து கோவிலுக்கு சென்று சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
கோவில் ஒன்றில், சிட்டுக்குருவிகள் காதில் தனது பிரார்த்தனையை கூறி, அவைகளை ரம்யா பறக்கவிடுகிறார். இந்த வித்தியாசமான வேண்டுதல் தொடர்பான வீடியோ ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார்.
ஆனால், இந்த வீடியோவில் அவர் அணிந்திருந்த உடை தொடை தெரிவதுபோல் மிகவும் கவர்ச்சியாக இருக்கிறது. இதனை கவனித்த ரசிகர்கள், கோவிலுக்கு இப்படி தான் கவர்ச்சியான உடை அணிந்து செல்வீர்களா? பேண்ட் எங்கே? என்று கமெண்ட் தெரிவித்து வருகிறார்கள்.
https://www.instagram.com/p/B7fzM_VnlM9/




