Spotlightசினிமா

பொங்கலுக்கு பிறகு துவங்குகிறது “இந்தியன் 2” படப்பிடிப்பு!

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் 1996ஆம் ஆண்டு வெளியான படம்தான் ‘இந்தியன்’. இப்படம் விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

தற்போது, இப்படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கும் முயற்சியில் இயக்குனர் ஷங்கர் ஈடுபட்டு வருகிறார். இந்தியன் 2 படத்தை லைகா புரொடக்சன்ஸ் தயாரிக்க இருக்கிறது என்றும் காஜல் அகர்வால் கதாநாயகியாக நடிக்க இருக்கிறார் என்றும் அண்மையில் செய்திகள் வெளியானது.

இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் 18 ஆம் தேதி தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பொள்ளாச்சி, உக்ரைன் போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடத்த படக்குழு திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் கமல்ஹாசன் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Facebook Comments

Related Articles

Back to top button