
சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, காயத்ரி மற்றும் குரு சோமசுந்தரம் நடிக்க உருவாகியிருக்கும் படம் தான் ”மாமனிதன்”. படம் வெளியாகி பத்து நாட்கள் ஆன நிலையில் குடும்பங்கள் கொண்டாடும் படமாக திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
யுவன் ஷங்கர் ராஜா மற்றும் இளையராஜா முதன் முறையாக இணைந்து இசையமைத்த படம் இதுவாகும். யுவன் ஷங்கர் ராஜா இப்படத்தை தயாரித்திருந்தார்.
படத்தின் பட்ஜெட் மற்றும் வசூல் நிலவரத்தை தற்போது காணலாம்.
படத்தின் மொத்த பட்ஜெட் – 9 கோடி,
திரையரங்கில் கிடைத்த மொத்த வசூல் – 2.60 கோடி,
ஓடிடி’யில் மட்டும் – 6.50 கோடி,
சேட்டிலைட் – 3.5 கோடி
மற்ற மொழிகளில் – 1 கோடி
ஓவர்சீஸ் – 40லட்சம்
படம் தயாரித்த யுவன் ஷங்கர் ராஜாவிற்கு இப்படம் ஒரு நல்ல லாபத்தையே தற்போது வரை ஈட்டிக் கொடுத்துள்ளது.
இப்படம் கொடுத்த நல்ல ஒரு ரிசல்ட்டால், தொடர்ந்து அடுத்தடுத்து நான்கு படங்களை தயாரித்து வருகிறார் யுவன் ஷங்கர் ராஜா.