
நாடகம் மற்றும் திரைப்பட நடிகர் கிரேஸி மோகன், சற்று நேரத்திற்கு முன்பு (2 மணிக்கு) மாரடைப்பால் திடீர் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 66.
’அபூர்வ சகோதரர்கள்’, ‘காதலா காதலா’, ’வசூல் ராஜா எம்.பி.பி.எஸ்’, ‘இந்தியன்’, ‘அருணாச்சலம்’ உள்ளிட்ட பல படங்களில் காமெடி வேடங்களில் நடித்திருக்கும் கிரேஸி மோகன், பல்வேறு மேடை நாடகங்களை இயக்கி நடித்தும் இருக்கிறார்.
நடிப்பதோடு, பல படங்களுக்கு வசனகர்த்தாவாக இருந்து பல படங்களின் வெற்றிக்கு இவரே அடித்தளமாகவும் இருந்திருக்கிறார்.
Facebook Comments





