
சிவகார்த்திகேயன் நடிப்பில் பி எஸ் மித்ரன் இயக்கத்தில் உருவாகி வருகிறது ;ஹீரோ’. இப்படத்தினை கே ஜே ஆர் நிறுவனம் மிகவும் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது.
படத்தினை வரும் 20ஆம் தேதி வெளியிட படக்குழு முடிவு செய்து அதற்கான ப்ரொமோஷன் பணிகள் படுவேகமாக நடைபெற்று வருகிறது.
நேற்று முன்தினம் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டது. அனைத்து தரப்பு ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்திழுத்த இந்த ட்ரெய்லர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.
யூடியூப் தளத்தில் இதுவரை சுமார் 41 லட்சம் (4.1 மில்லியன்) பார்வையாளர்களை கடந்து இதன் ட்ரெய்லர் பார்க்கப்பட்டு வருகிறது.
தொடர்ந்து ட்ரெண்டிங்கில் இரண்டாவது இடத்தை தக்கவைத்துள்ளது.
இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார் யுவன் ஷங்கர் ராஜா.
Facebook Comments




