
இயக்குநர் பா ரஞ்சித் இயக்கத்தில், யாழி ஃபிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து நீலம் ப்ரொடக்சன்ஸ் தயாரித்துள்ள திரைப்படம் ‘நட்சத்திரம் நகர்கிறது’.
காதலை மாறுபட்ட கோணத்தில் அதன் அரசியலை பேசும் இப்படத்தில் காளிதாஸ் ஜெயராம், துஷாரா, கலையரசன், டான்ஸிங் ரோஸ் கபீர் ஆகியோருடன் ஒரு பெரும் நட்சத்திரக் கூட்டம் இணைந்து நடித்துள்ளனர்.
இத்திரைப்படம் நாளைய மறுதினமான 31-ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.
இந்நிலையில், இப்படத்திற்கான ப்ரொமோஷன் பணிகளுக்காக மாநிலம் கடந்து சென்று கொண்டிருக்கிறது படக்குழு.

நேற்றைய தினம், மும்பையில் நட்சத்திரம் நகர்கிறது திரைப்படம் சினிமாவின் முக்கிய பிரமுகர்களுக்கு பிரத்யேகமாக திரையிடப்பட்டது.
மிகவும் பிரபலமான இயக்குனரான அனுராக் இப்படத்தை பார்த்துவிட்டு இயக்குனர் பா.இரஞ்சித்தை கட்டிப்பிடித்து பாராட்டியுள்ளார்.
அதுமட்டுமல்லாமல், படத்தை பார்த்த அனைவரும் இயக்குனரையும் படக்குழுவினரையும் வெகுவாக பாராட்டியுள்ளனர்.
இதனால் படக்குழுவினர் மிகுந்த உற்சாகத்தில் இருக்கின்றனர்.




