
நடிகர் அர்ஜுனின் தாயார் லட்சுமி தேவி அம்மாள் வயது 84 உடல்நிலை சரியில்லாமல் இன்று மதியம் 3.30 மணியளவில் பெங்களூரில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணம் அடைந்ததார்.
பெங்களூரில் உள்ள அர்ஜுனின் சொந்த ஊரான மதுகிரி அருகில் உள்ள ஜக்குநல்லியில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு அதே ஊரில் அவர்களது தோட்டத்தில் உள்ள அர்ஜுனின் அப்பாவின் சமாதி அருகே நாளை நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.
நடிகர் அர்ஜுன் தாயார் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அதில், “நடிகர் அர்ஜுனின் தாயார் திருமதி. லட்சுமி தேவி அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக பெங்களூரில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று பிற்பகல் இயற்கை எய்தினார் என்று அறிந்து மிகவும் துயருற்றேன்.
தாயாரின் இழப்பால் தவிக்கும் நடிகர் அர்ஜுன் மற்றும் அவரது குடும்பத்தாருக்கு எனது ஆறுதலையும் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.” இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.