Spotlightசினிமா

”கராத்தே பாபு”; ரவி மோகனை வைத்து மூன்றாவது படம்… தொடர் தோல்வியிலிருந்து மீளுமா தயாரிப்பு நிறுவனம்!?

டாடா படத்தின் இயக்குனரான கணேஷ் பாபுவின் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்க உருவாகி வருகிறது ”கராத்தே பாபு”. படத்தின் டைட்டில் டீசர் சற்று முன் வெளியானது.

இப்படத்தினை ஸ்கிரீன் சீன் மீடியா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது. ஏற்கனவே இந்நிறுவனமானது ஜெயம் ரவியை வைத்து அகிலன், ப்ரதர் என்ற இரு படங்களை தயாரித்திருந்தது.

இந்த இரு படங்களும் பொருளாதார ரீதியாக தயாரிப்பு நிறுவனத்திற்கு மிகப்பெரும் நஷ்டத்தை ஏற்படுத்திக் கொடுத்த படங்களாகும்.

தொடர்ந்து மூன்றாவது முறையாக ஜெயம் ரவியை வைத்து “கராத்தே பாபு” என்கிற படத்தை தயாரித்து வருகிறது ஸ்கிரீன் சீன் மீடியா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம். இப்படத்தின் மூலமாவது தொடர் தோல்வியிலிருந்து மீளுமா தயாரிப்பு நிறுவனம்? என்று பலரும் எண்ணி வருகின்றனர்.

இப்படத்தில், நாசர் , கே எஸ் ரவிக்குமார், சக்தி வாசு, சுப்ரமணியம் சிவா உள்ளிட்ட நட்சத்திரங்கள் ஏராளமானோர் நடித்திருக்கிறார்கள்.

விரைவில், இப்படத்தின் அடுத்தடுத்த அப்டேட் வெளிவரும் என படக்குழு தெரிவித்துள்ளது.

Facebook Comments

Related Articles

Back to top button