Spotlightசினிமா

6 நாட்களில் 25 கோடி; தெறிக்க விடும் ‘கோமாளி’ வசூல்!

ஜெயம் ரவி, காஜல் அகர்வால், யோகி பாபு, சம்யூக்தா ஹெக்டே நடிப்பில் அறிமுக இயக்குனர் ப்ரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் உருவாகி கடந்த வியாழன் அன்று வெளியான படம் தான் ‘கோமாளி’.

இப்படத்தினை வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷ்னல் சார்பில் ஐசரி கணேசன் தயாரித்திருந்தார். சக்தி பிலிம் பேக்டரி நிறுவனம் சார்பாக சக்திவேல் இப்படத்தை வெளியிட்டிருந்தார்.

நல்ல விமர்சனத்தை பெற்ற இப்படம் மக்களிடையே அமோக வரவேற்பை பெற்றது. தொடர்ந்து விடுமுறை தினம் என்பதால், குடும்பம் குடும்பமாக திரையரங்கிற்கு வந்து படத்தினை பார்த்துச் செல்கின்றனர்.

படத்தில் கூறப்பட்ட கருத்து தற்போதைய சூழலுக்கு தேவையான ஒன்று என்பதால், மக்களிடையேஅமோக வரவேற்பை பெற்றுள்ளது.

குழந்தைகள் கொண்டாடும் விதமாக யோகிபாபுவின் காமெடி சரவெடியாய் தெறிக்க, திரையரங்குகளில் சிரிப்பலைகள் விண்ணை முட்டுகிறது.

இப்படம், 6 நாட்களில் மட்டும் இதுவரை சுமார் 25 கோடி வசூல் செய்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Facebook Comments

Related Articles

Back to top button