Spotlightசினிமா

ரஜினிகாந்தின் அவசர பிரஸ் மீட்டுக்கு இவர் தான் காரணமா..?? அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய ஜோதிடர்!

னது அரசியல் பிரவேசத்தை எப்போது ரஜினிகாந்த் அறிவிப்பார் என்ற பரபரப்பு தமிழகத்தில் எப்போதும் நிலவி வந்தது.

இந்நிலையில், தனது அதிகாரப்பூர்வ பத்திரிகையாளர் சந்திப்பை ரஜினிகாந்த் இன்று நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடத்தவிருக்கிறார்.

காலை 10.30 மணிக்கு இந்த சந்திப்பு நடைபெறவிருக்கிறது. இந்த சந்திப்பிற்கு முக்கிய காரணம் பல விதமாக சொல்லப்பட்டாலும், தனது அரசியல் எண்ட்ரீயை தீர்மானிக்கும் ஒரு முக்கிய சந்திப்பாக தான் இதை பார்க்க முடிகிறது.

சில தினங்களுக்கு முன் பிரபல இளம் ஜோதிடர், பாலாஜி ஹாசனை தனது இல்லத்திற்கு அழைத்து ஜோதிடம் பார்த்துள்ளார் ரஜினிகாந்த்.

அந்த ஜோதிடத்தின் முடிவு, ரஜினிகாந்த் எதிர்பாராத ஒன்று வர, அதன் விளைவு தான் இந்த ப்ரஸ்மீட்டுக்கு காரணம் என்கிறது ஒரு தரப்பு.

அப்படி என்றால், அந்த ஜோதிடர் சொல்வதெல்லாம் உண்மையா..? அவர் சொல்வதெல்லாம் அப்படியே நடந்துவிடுமா என்ன..?? என்ற கேள்விக்கு பலர் ஆம் என்றே கூறுகின்றனர்.

பலர் ஆட்சி அரியணையில் ஏறுவதை முன்கூட்டியே கணித்து கூறி மக்கள் பலரிடமும் நன்மதிப்பை ஏற்கனவே பெற்றிருக்கிறார்.

எது எப்படியோ ரஜினியின் முடிவுக்காக காத்திருப்போம் இன்று காலை 10.30 வரை..

Facebook Comments

Related Articles

Back to top button