Spotlightசினிமா

ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து சிம்பு எஸ்கேப்… கூடுமா “மாநாடு”!

சிம்பு என்ற பெயர் என்றாலே சர்ச்சைதான் என்று பலரும் எண்ணியிருந்தனர். அதை எல்லாம் முறியடிக்கும் விதமாக, தனது உடல் எடையை குறைத்து மீண்டும் பழைய சிம்புவாக ஈஸ்வரனில் தோன்றினார்.

சுசீந்திரன் இயக்கத்தில் ஒரே கட்டமாக ‘ஈஸ்வரன்’ படத்தை நடித்து முடித்தார் சிம்பு. அதன் டப்பிங் பணிகளை படுவேகமாக ந்டத்தி முடித்தார். முடித்த கையோடு ஏற்கனவே ஒப்பந்தம் செய்யப்பட்ட ‘வெங்கட் பிரபு’ இயக்கத்தில் உருவாகும் ‘மாநாடு’ படத்திற்கும் ஷூட்டிங்க் செல்ல ஆரம்பித்தார்.

பாண்டிச்சேரியில் சிம்பு கலந்து கொள்ள ‘மாநாடு’ படப்பிடிப்பு படு ஜோராக நடைபெற்று வந்துள்ளது. இந்நிலையில், வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிய கதை போல், சிம்பு மீண்டும் படப்பிடிப்பில் இருந்து வெளியேறியுள்ளார். தனக்கு அங்கு பாதுகாப்பில்லை என்று கூறி வீட்டிற்கு கிளம்பி சென்றுவிட்டாராம் சிம்பு.

தினமும் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு மதியத்திற்கு மேல் தான் சிம்பு வருவாராம். ஒரு நாளைக்கு அதிக பட்சம் 3 மணி நேரம் மட்டுமே செட்டில் இருந்திருக்கிறார். இவருக்கு உதவியாளர்கள் மேக்கப் மேன் ஜிம் பாய்ஸ் என சுமார் 18 பேர்கள் புடை சூழதான் செட்டுக்கே வந்து சென்றாராம் சிம்பு.

மாநாடு படத்தில் இதுவரை எடுக்கப்பட்ட அவரது காட்சிகள் வெறும் 20% தானாம்… இன்னும் 80% படப்பிடிப்பை சிம்புவை வைத்து எப்படி எடுக்கப்போகிறோமோ.? என்று தலையில் துண்டை போட்டு உட்கார்ந்துள்ளது தயாரிப்பு தரப்பு.

Facebook Comments

Related Articles

Back to top button