
சில தினங்களுக்கு முன் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற போது நடிகர் விஜய் சேதுபதி உதாரணமாக ஒருவர் கூறியதை கதையாக கூறினார்.
அது, ”கடவுளை குளிக்கும் போது காண்பிக்கிறார்கள், அவருக்கு உடை மாற்றும் போது மட்டும் ஏன் அதை மறைக்கிறார்கள்..??” என்பது தான்.
பல மாதங்களுக்கு முன் நடைபெற்ற அந்த நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி கூறியதை, தற்போது ஏதோ ஒரு காரணத்திற்காக எடுத்துக் கொண்டு வேண்டுமென்றே அது சர்ச்சையாக்கப்பட்டு வருகிறது.
அவர் கூறிய அந்த கதைக்காக , இந்து கோயில் பூஜைகளை கொச்சைப்படுத்தியதாக நடிகர் விஜய் சேதுபதி மீது திருச்சி காவல் ஆணையர் அலுவலகத்தில் அகில இந்திய இந்து மகாசபா சார்பில் இன்று புகார் அளிக்கப்பட்டுள்ளது.
Facebook Comments



