Spotlightஇந்தியா

தலைமைச் செயலகத்தில் ஒளிபரப்பப்பட்ட ஆபாச வீடியோ.. அதிர்ச்சியில் ஆட்சியாளர்கள்!

ராஜஸ்தான் மாநில தலைமை செயலகத்தில் உணவு மற்றும் பொது விநியோக துறை தொடர்பான அதிகாரிகள் கூட்டம் அமைச்சர் தலைமையில் நடந்தது.

பொது வினியோக துறையில் என்னென்ன மாற்றங்கள் செய்யலாம் என்பது குறித்த ஒரு பவர் பாயிண்ட் பிரண்டேஷன் திரையில் காண்பிக்கப்பட்டது.

அப்போது திடீரென அந்த திரையில் சில வினாடிகள் ஆபாச படம் ஓட அனைவரும் அதிர்ச்சி அடைந்தார்கள். காரணம் அந்த கூட்டத்தில் பல பெண் அதிகாரிகளும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆபாச படம் ஓடத் தொடங்கிய சில வினாடிகளில் அது நிறுத்தப்பட்டு கூட்டம் பாதியில் முடிக்கப்பட்டது.

அந்த வீடியோவை தயாரித்தது யார், எப்படி ஆபாச படம் அதில் நுழைந்தது என்பது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் சில தினங்களுக்கு முன்பு நடை பெற்றாலும் இப்போது தான் வெளியே கசிந்துள்ளது.

அமைச்சர் கலந்து கொண்ட கூட்டத்தில் ஆபாச படம் பார்த்த விவகாரம் ராஜஸ்தான் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஏற்கனவே இப்போது உள்ள ராஜஸ்தான் தலைமைச் செயலகத்தில் அமானுஷ்யமான சம்பவங்கள் நடப்பதாக அந்த மாநிலச் சட்டமன்ற உறுப்பினர்கள் பலர் பீதி கிளப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த ஆபாச வீடியோ விவகாரமும் ஏதாவது அமானுஷ்ய சக்தியின் வேலையாக இருக்கும் என்கிறார்கள் சிலர்.

இதற்கு காரணம் அந்த கட்டடம் அமைந்து உள்ள இடத்தில் முன்பு இடுகாடு இருந்ததாம்.

Facebook Comments

Related Articles

Back to top button