
இயக்குனர் கல்யாண கிருஷ்ணன் இயக்கத்தில் ஜெயம் ரவி, ப்ரியா பவானி சங்கர், தான்யா ரவிச்சந்திரன், ஹரீஷ் பெரேடி உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகி வரும் வெள்ளி அன்று திரைக்கும் வரும் படம் தான் “அகிலன்”.
சில தினங்களுக்கு முன் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி அனைத்து தரப்பு ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்த நிலையில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
அகிலன் படத்தினை இயக்கிய இயக்குனர் கல்யாண கிருஷ்ணன், இதற்கு முன் பூலோகம் என்ற படத்தை ஜெயம் ரவியை வைத்தே இயக்கியிருந்தார்.
இப்படம் பெரிதளவில் பேசப்பட்டது. அதிக பொருட்செலவில் மிகப்பெரும் நட்சத்திரங்களின் கூட்டணியில் உருவாக்கப்பட்டிருந்தது இப்படம்.
அகிலன் படத்தில் ஜெயம் ரவியின் தோற்றம், படத்திற்கான ஒளிப்பதிவு, பின்னணி இசை என அனைத்தும் மிரட்டலாக தோன்றுவதால் படத்திற்கு அதீத வரவேற்பு கிடைக்க வாய்ப்பிருப்பதாக திரையரங்கு வட்டார செய்திகள் கூறுகின்றன.
ஜெயம் ரவியின் சினிமா கேரியரில் மிக முக்கியமான படமாக இப்படம் இருக்கும் என்கிறார்கள் திரையுலகினர்.
அகிலன் நிச்சயமாக அனைவரையும் ஆட்கொள்வான் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.





