Spotlightசினிமா

அடுத்தடுத்த சுற்றுக்குச் சென்ற தல ‘அஜித்’!

 

அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை படம் ஆகஸ்ட் 8-ம் தேதி வெளியாக இருக்கும் நிலையில், அவரது 60-வது படம் ஆகஸ்ட் மாத இறுதியில் துவங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் துப்பாக்கி சுடுதல் பயிற்சி எடுத்து வந்த நடிகர் அஜித் கடந்த வார இறுதியில் கோவையில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலந்து கொண்டார். 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் சென்னை ரைஃபிள் கிளப் சார்பாக கலந்து கொண்ட அஜித், 5 சுற்றுகளில் 400 பாயின்ட்களுக்கு 314 பாயின்ட்களைப் பெற்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றார்.

இந்நிலையில், அஜித் அடுத்தகட்ட சுற்றுக்கும் முன்னேறியுள்ளார் என்ற செய்தியும் வந்துள்ளது.

ரசிகர்களுக்கு கொண்டாட்ட செய்தியாக வந்துள்ளது இந்த தகவல்….

Facebook Comments

Related Articles

Back to top button