Spotlightசினிமா

‘தளபதி 65’ படத்தினை இயக்குபவர் இவரா..?? மறுத்த விஜய் தரப்பு!

லோகெஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்க உருவாகி வருகிறது ‘தளபதி 64’. இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

அடுத்த வரும் ஏப்ரல் மாதம் இப்படத்தினை திரைக்கு கொண்டு வர படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். இந்நிலையில், தளபதி 65 படத்தினை இயக்கப்போகும் அந்த இயக்குனர் யார் என்ற கேள்வி கோலிவுட்டை வலம் வந்து கொண்டிருக்கிறது.

அடுத்ததாக விஜய் மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிக்க இருப்பதாகவும் அதற்கான வேலைகள் நடந்து வருவதாகவும் நேற்று தகவல் வைரலானது.

நான்கு மாதத்திற்கு முன்பு விஜய்யை சந்தித்த மகிழ் திருமேனி, ஒரு கதையை கூறியிருக்கிறார். ஆனால்,அது தளபதி 64க்கான தேர்வு கதை தான் என்று கூறப்படுகிறது. தளபதி 65 படத்தினை மகிழ்திருமேனி இயக்கவில்லை என்று விஜய் தரப்பு தெரிவித்துள்ளது.

அதுமட்டுமில்லாமல் மகிழ் திருமேனி தற்போது உதயநிதி ஸ்டாலினை வைத்து படம் ஒன்றை இயக்க தீவிரம் காட்டிவருகிறார்.

Facebook Comments

Related Articles

Back to top button